போட்டித் தேர்வுகளில் குளறுபடியை தவிர்க்க புதிய நடைமுறை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு பிரிக்ஸ் பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெத்லஹேம் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் பார்வை யிட்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் மூலம் ஜனவரி மாதம் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 56 ஆயிரம் பேர், குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம்பேர் தேர்வுக்கான ஹால்டிக் கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஹால்டிக்கெட் பதிவிறக் கம் செய்வதற்கு ஆதார் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் ஓடிபி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கான எளிய முறையை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 856 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,016 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

போட்டித் தேர்வுகளில் நடைபெறும் குளறுபடிகளைத் தவிர்க்க, தேர்வர்கள் எழுதும் விடைத்தாள்களில், எழுதப்படும் விடைகளுக்கு ஓஎம்ஆர் சீட்டில் குறித்திருக்க வேண்டும். அவ்வாறு குறிக்கப்படுவதை அத்தேர்வு மையக் கண்காணிப்பாளர் சரிபார்த்து, சான்றிதழ் தர வேண்டும் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல 2 பகுதி ஓஎம்ஆர் சீட்டுகள் வழங்கப்படும். அதில் ஒரு சீட்டில் தேர்வரின் விவரமும், மற்றொரு சீட்டில் பார் கோடின் மூலமாக தேர்வரின் விவரங்களும் பதியப்பட்டு, தேர்வு முடிவடைந்ததும் பார் கோடுள்ள தாள் இரண்டாக பிரிக்கப்பட்டு, அந்த பகுதி மட்டுமே ஸ்கேன் செய்யப்படும். இதனால் தேர்வரின் எண், தேர்வர் யார் என்ற விவரம், வேறு யாருக்கும் தெரியாது. எழுதி முடிக்கப்பட்ட தேர்வுத் தாள்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, ஜிபிஎஸ் பூட்டு பொருத்தப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்