செங்கை மாவட்டம், வில்லியம்பாக்கம் கிராமத்தில் 50 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 50 ஆயிரம்மதிப்பிலான கறவைப் பசுக்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று பயனாளிகளுக்கு கறவைப் பசுக்களை வழங்கினார். இதில் ஆட்சியர் ஜான் லூயிஸ், மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கலா, செங்கை உதவி இயக்குநர் புகழேந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் வண்டலூர் அருகேரூ.14 லட்சம் மதிப்பீட்டில் மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்ட கால்நடைகிளை நிலையத்தையும் அமைச்சர்தொடங்கி வைத்தார். இதே போல் பல்லாவரத்தில் 4 ஆயிரம்பேருக்கும் இலவச சைக்கிள்களையும் அமைச்சர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் தெரிவித்ததாவது: தேர்தலில்தனித்தே ஆட்சி அமைக்கும் செல்வாக்கு அதிமுகவுக்கு உள்ளது. அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் மக்களின் எழுச்சி தெரிகிறது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம்கிடையாது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago