அரசுப் பேருந்து சேவை குறைப்பால் செங்கல்பட்டு கிராம பகுதி மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செங்கையில் இருந்து 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வந்தன. இதனால் கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் கரோனா பாதிப்புக்குப் பிறகு பேருந்து சேவையின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் இப்பகுதி மக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, முன்பு இயக்கப்பட்டதைப் போல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘‘தற்போது 50 சதவீத பேருந்துகள்தான் இயங்குகின்றன. அதிகாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிகாலையில் மார்க்கெட்டுக்கு செல்லும் சிறுவியாபாரிகள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால் ஓட்டுநர், நடத்துநர், பணியாளர்கள் பற்றாக்குறையை காரணமாக சொல்கின்றனர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்