காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் நகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க சிறிய தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வதுவட்டம் பிள்ளையார்பாளையம் கச்சபேஸ்வரர் நகரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவதிப்படுவதாக காஞ்சிபுரம் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அந்தப் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8.75 லட்சம் நிதியை ஒதுக்கினார். இந்தப் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து சிறிய தொட்டியை கட்டித்தரவும் காஞ்சிபுரம் நகராட்சிக்கு அனுமதி வழங்கினார்.
இதன்படி, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கச்சபேஸ்வரர் நகர் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து சிறிய தொட்டி கட்டும் பணி நேற்று தொடங்கியது.
இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், திமுக நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், மாநில வர்த்தகரணி துணை செயலாளர் வி.எஸ்.இராமகிருஷ்ணன், நகர அவைத் தலைவர் எஸ்.சந்துரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago