வன்கொடுமை தடுப்பு வழக்கில் தூத்துக்குடி எஸ்பி சாட்சியளித்தார்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபு ரத்தை அடுத்த பொய்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (51). இவர் கடந்த 7.9.2006-ல் புதுப்பாலப்பட்டு கிராமத்திற்கு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில்புதுப்பாலப்பட்டை சேர்ந்த சிலர் முனு சாமியை, சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கினர். புகாரின்பேரில் 17 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத் தின் கீழ் சங்கராபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது, திருக்கோவிலூர் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜெயக் குமார், இவ்வழக்கின் விசாரணை அலுவலராக இருந்தார். தற்போது இவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக உள்ளார். விழுப்புரம் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தது. இவ்வழக் கின் விசாரணை அலுவலராக இருந்த ஜெயக்குமார் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு தொடர்பாக அவர் சாட்சி யம் அளித்தார். நீதிபதி எழிலரசி, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்