பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை அருகே உள்ள பந்தல்குடி போதுரெட்டியபட்டி தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி மனைவி இந்திராணி(45). இவர் கடந்த 26-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளி யூர் சென்றிருந்தார். நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இந்தி ராணிக்குத் தகவல் தெரி வித்தனர்.

ஊர் திரும்பிய இந்திராணி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்