விலைவாசி உயர்வைத் தவிர்க்க பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா

By செய்திப்பிரிவு

விலைவாசி உயர்வைத் தவிர்க்க மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

திண்டுக்கல்லில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது எனக் கூறிய கருத்து நியாயமானது அல்ல. பொறுப்புள்ள அதிகாரியாக இருந்தவர் தவறாக சொல்லி விட்டார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலை ஏற்றத்துக்கு வழிவகை செய்யும். இதனால் கூலித் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்படுவர். அன்றாடம் பயன்படுத்தக் கூடிய காய்கறி, அரிசி, பருப்பு விலை உயரும் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். குப்பைக்கு வரி விதிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் முழுவதும் குப்பை வரியை நீக்கவேண்டும்.

எங்கள் கோரிக்கைகளை எழுத்துப் பூர்வமாக ஏற்கக் கூடிய கட்சிகளுக்கு தேர்தல் அறிவித்தபிறகு எங்கள் ஆதரவைத் தெரிவிப்போம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்