கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் 3452 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப் பட்டணத்தில் 3452 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை கே.பி.முனுசாமி எம்பி வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசுப் பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். பர்கூர் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ முனிவெங்கடப்பன், முன்னாள் எம்பி அசோக்குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வெங்கடாஜலம், மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி, 3452 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது, கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசியிலிருந்து 3-வது இடத்தில் இருந்தது. ஏன் என்றால் முறையாக கல்விக்கூடங்கள் அப்போது இல்லை. ஆனால் தற்போது 5 கிமீ சுற்றளவில் மேல்நிலைக்கல்வி கற்கும் சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. ஒன்றிணைந்த மாவட்டமாக இருந்தபோது 2 கல்லூரிகள் மட்டுமே இருந்தன. கடந்த 20 ஆண்டுகளில் 25 புதிய கல்லூரிகள் உருவாக்கப் பட்டுள்ளன.

கல்விதான் மிகப்பெரிய ஆயுதம். சோதனைகளை எதிர் கொள்ளும் சக்தியை கல்விதான் கொடுக்கிறது. எனவே மாணவர்கள் தங்களை ஒருமுகப்படுத்தி கல்வி கற்று முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி துணை ஆய்வாளர் ஜெயராமன், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் காத்தவ ராயன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்