கரூர் மாவட்டம் பழையஜெயங் கொண்டம் பேரூராட்சியில் பழைய காவிரி குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்காக மகாதானபுரம் காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அப்பேரூராட்சிக்கு உட்பட்ட ஓமாந்தூர், குப்புரெட்டிபட்டி, புதுப்பட்டி வழியாக குடிநீர் குழாய்கள் செல்கின்றன. இக்குழாய்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் ரூ.1.60 கோடியில் காவிரி புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மகாதானபுரத்திலிருந்து தொட்டியப் பட்டி வழியாக பழையஜெயங் கொண்டத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக மகாதானபுரம் வழியாக செல்லும் பழைய குடிநீர் குழாய்க்கு பதிலாக புதிய குழாயை பதித்து தண்ணீர் எடுத்து செல்ல நேற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதுகுறித்து தகவலறிந்த ஓமாந்தூர், குப்புரெட்டிபட்டி, புதுப்பட்டி பகுதி மக்கள் அங்கு திரண்டு புதிய குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாலாபேட்டை போலீஸார் அங்கு வந்து, பொதுமக்களை சமாதானப்படுத்தி பணிகளை தடுத்து நிறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago