அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற நடிகர் ரஜினியின் அறிவிப்பு பாஜகவுக்கு கிடைத்த மகத்தான தோல்வி என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தி.மலையில் செய்தியாளர் களிடம் நேற்று மாலை கே.எஸ்.அழகிரி கூறும்போது, “நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சியை தொடங்க மாட்டார் என ஆரம்பத்திலேயே கூறினேன். அரசியலுக்கு வர அவருக்கு ஆர்வம் கிடையாது. அவர், ஆன்மி கத்தில் நாட்டம் உள்ளவர். ஆன்மி கத்தில் இருப்பவர்கள் அரசிய லுக்கு வர விரும்ப மாட்டார்கள், அரசியல் கட்சியையும் தொடங்க மாட்டார்கள். கடந்த 1996-ல், ஜெயலலிதா தோற்க வேண்டும் என விரும்பினார். திமுக – தமிழ்மாநில காங்கிரசை ஆதரித்தார். அப்போது கட்சி தொடங்க சிலர் வலியுறுத்தியும், விருப்பமில்லை என கூறிவிட்டார். அந்த காலக் கட்டத்தில் அவருக்கு நல்ல உடல் நலமும், ரசிகர்களின் செல்வாக்கும் இருந்தது. அப்போதே கட்சி தொடங்க விரும் பாதவர், இப்போது விரும்புவாரா?
பாஜகவின் அழுத்தம் காரண மாக அவரது மனமும், உடலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர், கட்சி தொடங்கவில்லை என்ற அறி விப்பு பாஜகவுக்கு கிடைத்த மகத் தான தோல்வியாகும். தமிழக அரசுக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக, பாஜகவில் உள்ள சில ராஜதந்திரிகள் மூலம் ரஜினியை கட்சி ஆரம்பிக்க கட்டாயப்படுத்தினர். அவர்களது கணக்கு, இப்போது பொய்த்து விட்டது. பாஜக விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்துவிட்டார். அவருக்கு எனது பாராட்டுக்கள். அப்படியே ரஜினி கட்சி தொடங்கி இருந்தாலும், திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். கொள்கை ரீதியில் அமைந்துள்ள கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க விரும்புகின்றனர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago