அவிநாசி சிப்காட் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்படமாட்டாது முதல்வர் கே.பழனிசாமி உறுதி

By செய்திப்பிரிவு

சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வந்த முதல்வர் கே.பழனிசாமி, அங்கிருந்து சாலைமார்க்கமாக காரில் சேலம் செல்லும்வழியில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அதிமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவர் கூறும்போது, "திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் நிறைவுபெற்றுள்ள பணிகள், வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கிவைக்கப்படும். மேலும் விவசாயிகள், பொதுமக்களின் வேண்டுகோ ளுக்கு ஏற்ப, அவிநாசியில் சிப்காட் திட்டத்துக்கு நிலம் கையகப் படுத்தப்படமாட்டாது.

திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மருத்துவக் கல்லூரி அமைக்க அதிமுகஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், ரூ.71 கோடியில்அன்னூர் - மேட்டுப்பாளையம் கூட்டு குடிநீர்த் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, ரூ.900 கோடியில் புஷ்பா சந்திப்பு முதல் பாண்டியன்நகர் வரை புதிதாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப் படவுள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்