காஞ்சிபுரத்தில் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காவலான் கேட்பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.நேரு தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முகமது அலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எட்டு வழிச் சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அந்தச் சாலை எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்தும் விளக்கிப் பேசினர்.
போலீஸார் குவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் ஜி.மோகனன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி காஞ்சிபுரம் காவலான் கேட்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை மிரட்டும் வகையில் வஜ்ரா உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் தேவையற்ற கெடுபிடிகளை விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago