வாகனங்களின் முகப்பில் பம்பர் இருந்தால், விபத்து நேரும்போது காற்றுப் பைகள் திறப்பதில்லை. இதனால் காரின் முன்பகுதியில் அமர்ந்திருப்போர் படுகாயமடைந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்க வாகனங்களின் முகப்பில் பம்பர் வைக்கக் கூடாது. பம்பர் பொருத்தப்பட்டிருந்தால், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களின் வாகனங்களிலும் இருந்த பம்பர்கள் நேற்று அகற்றப்பட்டன. மேலும் மாவட்டத்தில் பம்பரை அகற்றாமல் விதிமுறையை மீறி வாகனம் ஓட்டியதாக இதுவரை 56 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago