நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும்தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் அமைச்சர் தங்கமணி தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் பழனிசாமி இன்றும், நாளையும் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். லாரி உரிமையாளர்கள் மற்றும் கோழிப் பண்ணையாளர்களை முதல்வர் இன்று சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து ராசிபுரம் அருந்ததியர் காலனியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து மதியம் திருச்செங்கோட்டில் போர்வெல் இயந்திர உற்பத்தி யாளர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. பின்னர், குமார பாளையத் தில் கட்சிக் கூட்டம், மாலை நாமக்கல்லில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்.

நாளை (30-ம் தேதி) சேந்த மங்கலத்தில் நடைபெறும் மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

முதல்வர் பயணம் தொடர்பாக நாமக்கல்லில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார். பல்வேறு தரப்பினரை சந்தித்து, அரசின் சாதனைகளை எடுத்து ரைக்க உள்ளார். பரமத்திவேலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.மணி, இரு தினங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். எனவே அந்தத் தொகுதிக்கு மட்டும் தமிழக முதல்வர் வேறொரு நாளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முதல்வரின் இந்த பயணம் தேர்தல் பிரச்சார பயணம் இல்லை. இதனால் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கவில்லை. தேர்தல் பிரச்சாரம் தனியாக மேற் கொள்ளப்படும். தற்போது கிராமம் வாரியாக மக்களை சந்தித்து அரசின் சாதனைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் முதல்வர் எடுத்துரைக்கிறார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை குழு நேற்று தான் முதன் முறையாக கூடியுள்ளது. இந்தக் குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரித்து முதல்வரிடம் வழங்கிய பின்னர் முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

நாமக்கல் மாவட்டத்திற்கு தமிழக அரசு அதிகளவில் வளர்ச்சித் திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் செய்துள்ளது. இம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகை தருவதை பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர், என்றார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் அதிமுக தலையீடு இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சரிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், அதிமுக வினர் அவர்களது வேலைகளை மட்டுமே செய்து வருகின்றனர். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் அதிமுகவினர் தலையீடு இல்லை. அரசு மீது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் குறை கூறுகிறார், என்றார்.

பேட்டியின்போது, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்