38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம் குறைந்த மக்கள்தொகை கொண்ட 2-வது மாவட்டமானது நாகை

By க.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நேற்று (டிச.28) முதல் செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் குறைந்த மக்கள்தொகை கொண்ட 2-வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டம் மாறியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலிருந்து 1995-ம் ஆண்டு கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அதன்பின்னர், 2007-ம் ஆண்டு நவ.23-ல் பெரம்பலூர் மாவட் டத்திலிருந்து அரியலூர் மாவட்டம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்தின் மிகக் குறைந்த மக்கள்தொகை (5,65,223 பேர்) கொண்ட மாவட்டமானது.

2-ம் இடத்தில் நீலகிரி, 3-ம் இடத்தில் அரியலூர், 4-ம் இடத்தில் கரூர் மாவட்டங்கள் இருந்தன.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு, நேற்று முதல் மயிலாடுதுறை தனி மாவட்டமாக செயல்படத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, 16,15,425 பேருடன் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டமாக இருந்த நாகப்பட்டினம், தற்போது தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை ( 6,97,069 பேர்) கொண்ட 2- வது மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஆனால், இதுவரை 2-வது, 3-வது இடத்தில் இருந்த நீலகிரி, அரியலூர் மாவட்டங்கள் தற்போது 3, 4-வது இடத்துக்கு சென்றுள்ளன. கரூர் மாவட்டம் 4-வது இடத்திலிருந்து 6-வது இடத்துக்கு சென்றுள்ளது. 5-வது இடத்தை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுள்ளது.

மக்கள்தொகை விவரம் (2011 மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி): பெரம்பலூர் மாவட்டம் 5,65,223 பேர், நாகப்பட்டினம் மாவட்டம் 6,97,069 பேர், நீலகிரி மாவட்டம் 7,35,384 பேர், அரியலூர் 7,54,894 பேர், மயிலாடுதுறை மாவட்டம் 9,18,356 பேர், கரூர் மாவட்டம் 10,64,493 பேர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்