தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில் தி.மலை மாவட்டம் செய்யாறு கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மாவட்டத் தலைவர் புரு ஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும் போது, “விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை கடந்த 50 ஆண்டுகளில் 20 மடங்கு உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் உழவு, உரம், கூலி என உற்பத்தி செலவு 300 மடங்கு உயர்ந்துவிட்டடது. இதனால், விவசாயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், நான்கில் ஒரு பங்கு விவசாய நிலங்கள் தரிசாக மாறிவிட்டன. எனவே, விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை முதல்வர் பழனிசாமி நிறைவேற்ற வேண்டும்.

ரேஷன் மற்றும் சத்துணவு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை, பாமாயில், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதை தமிழக அரசு தவிர்த்து, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களை அரசு கொள் முதல் செய்து பயன்படுத்த வேண்டும். நிதிநிலை அறிக் கையில் விவசாயத்துக்கு 3 சதவீதம் மட்டுமே ஒதுக்கப் படுகிறது. உணவு மானியத் துக்கு ஈடாக விவசாய உற்பத் திக்கு மானியத் தொகையை ஒதுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிதியை பிரதமர் மோடி வழங்குவதுபோல், தமிழக அரசும் ரூ.18 ஆயிரம் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 76 லட்சம் பேரில், பட்டா வைத்துள்ள 40 லட்சம் பேருக்கு மட்டுமே பிரதமரின் ஊக்கத் தொகை கிடைத்துள்ளது. பட்டா மாற்றம் கிடைக்காததால், மற்றவர்களால் ஊக்கத் தொகையை பெற முடிய வில்லை. எனவே, விண் ணப்பித்துள்ள அனைத்து விவ சாயிகளுக்கு விரைவாக பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக் கைகளை வலியுறுத்தி விவசா யிகள் முழக்கமிட்டனர். இதை யடுத்து, கோட்டாட்சியர் விமலா விடம் கோரிக்கை மனுவை விவசாயிகள் அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்