நீலகிரி மாவட்டத்தில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க, வீடு, வீடாகச்சென்று ‘டோக்கன்’ வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில், 2.12 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். ரூ.2,500ரொக்கத்துடன், பொங்கல் பரிசு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் நெரிசலைத் தவிர்க்கும் வகையில், வீடு, வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக கார்டுதாரர்கள் உள்ள ரேஷன் கடைகளில், தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பயனாளிகள் சிரமமின்றி வாங்கி செல்ல வேண்டும் என மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) கண்ணன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago