விசைத்தறியாளர்களின் ரூ.65 கோடி மூலதனக் கடனைதள்ளுபடி செய்ய கோரிக்கை

விசைத்தறியாளர்களின் மூலதனக் கடன் ரூ.65 கோடியை தமிழக முதல்வர் தள்ளுபடி செய்து, வங்கி ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து காக்க வேண்டுமென, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், பல்லடம் அருகே 63-வேலம்பாளையத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர்இரா.வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்புக்குட்டி (எ) பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.63-வேலம்பாளையம் பகுதி சங்கத் தலைவர் பத்மநாபன் வரவேற்றார்.

திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2.5 லட்சம் விசைத்தறிகள் செயல்படுகின்றன.

இந்த விசைத்தறிகள் மூலமாக,தொழிலாளர்கள் உட்பட சுமார் 5 லட்சம் பேர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இரண்டு மாவட்டங்களிலும் உள்ள விசைத்தறிகளில், 90 சதவீதம் கூலிக்கு நெசவு செய்யும் அடிப்படையில் இயங்குகின்றன.

இத்தகைய சூழலில், கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த கூலி கிடைக்காததால், வங்கிக் கடன்களை அடைக்க முடியாத சூழலில்விசைத்தறியாளர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, விசைத்தறியாளர்களின் மூலதனக் கடன் ரூ.65 கோடியைதள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

இதனை உடனடியாக செயல்படுத்தி, வங்கிகளின் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து விசைத்தறி யாளர்களை காக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்