கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் 70 சதவீதம் நிரம்பியது

By செய்திப்பிரிவு

ஆகவே, தமிழக அரசு, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய இரு ஏரிகளை இணைத்து, 'கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்’ என்ற புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை கடந்த 2013-ம் ஆண்டு செப். 11-ம் தேதி தொடங்கியது.

1,485.16 ஏக்கர் நிலத்தில், 380 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணி கடந்த மாதத்தில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம், கடந்த நவ. 21-ம் தேதி, மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவால் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

தொடர்ந்து, புதிய நீர்த்தேக்கமான கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரால் நிரம்பத் தொடங்கியது. அவ்வாறு நிரம்ப தொடங்கிய கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் நேற்று காலை நிலவரப்படி, அதன் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில், 353 மில்லியன் கன அடி (70 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது. அதே போல், 36.61 அடி உயரம் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் நேற்று காலை நிலவரப்படி, 28.10 அடி நீர் மட்டம் உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்