சொன்னது 40; வந்தது 15 கன அடி நீர் தான் சிவகங்கை அருகே கண்மாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்துக்கு பெரி யாறு பாசன ஷீல்டு கால்வாயில் 40 கன அடி நீர் திறக்கப்படும் என ஆட்சியர் அறிவித்த நிலையில் வெறும் 15 கன அடி நீர் மட்டுமே வருவதாகக் கூறி விவசாயிகள் கண்மாயில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டத்தில் 5 நேரடி பெரியாறு பாசனக் கால் வாய்கள் மூலம் 129 கண்மாய்ப் பகுதிகளைச் சேர்ந்த 6,038 ஏக்கர் நிலங்கள் ஒருபோகப் பாசன வசதி பெறுகின்றன.

செப்.27-ல் ஒருபோக பாசனத் துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய நீர் திறக்காததால் கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன.

பெரியாறு பாசன நீர் திறக்கா ததைக் கண்டித்து ஜன.7-ல் சிவகங்கை ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இந்நிலையில், ‘டிச.26 முதல் ஷீல்டு மற்றும் லெசிஸ் கால்வாய் களுக்கு தலா 40 கன அடியும், கட்டாணிப்பட்டி 2-வது மடை கால்வாய்க்கு 5 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது,’ என ஆட்சியர் கூறியிருந்தார்.

கள்ளராதினிப்பட்டி ஷீல்டு கால்வாயில் வரும் நீரின் அளவை விவசாயிகள் ஆய்வு செய்ததில் வெறும் 15 கன அடி மட்டுமே வந்தது. இதனால், அதிருப்தி அடைந்த விவசாயிகள் திருமலைக் கண்மாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐந்து மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.தேவர், ஒருங்கிணைப் பாளர்கள் முத்துராமலிங்கம், அன்வர் கூறுகையில், ‘‘ மதுரை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கொடுத்த தகவல்களை ஆய்வு செய்யாமல் ஆட்சியர் அப்படியே அறிக்கையாகக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு கால்வாயிலும் 40 கன அடி நீர் திறந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், 15 கன அடிகூட வரவில்லை.

இதைப் பொதுப்பணித் துறையின் ஸ்கேல் அளவைப் பார்த்தாலே தெரியும். தவறான தகவல்களை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திட்டமிட்டபடி 5 ஆயிரம் விவசாயிகளைத் திரட்டி ஜன.7-ல் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடு வோம்,’’ என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்