திமுகவின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது கனிமொழி எம்.பி. பேட்டி

By செய்திப்பிரிவு

பின்னர் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்க வில்லை. 23 லட்சம் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்று அதிமுக ஆட்சி மீது மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு நிறைவேற்றவில்லை.

திமுகவின் வெற்றி கானல் நீர் கிடையாது. அது நிச்சயிக்கப்பட்ட வெற்றி.

ரஜினி பூரண குணமடைந்து மறுபடியும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைச் சந்திக்க வேண்டும். பெரியார் மண்ணில் சாதி, மதத்தைக் கூறி ஓட்டு வாங்க முடியாது. மக்கள் நலம், சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். மக்களை யாரும் ஏமாற்ற முடி யாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை புளியம் பட்டியில் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். பின்னர், பாவடித்தோப்பில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து கலந்துரையாடிய கனி மொழி, அருப்புக்கோட்டை- மதுரை சாலையில் பொது மக்களைச் சந்தித்துப் பிரச் சாரம் மேற்கொண்டார். பிரச் சாரத்தின்போது விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் உடன் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்