தமிழ்நாடு தொழிலாளர் நல நிதியை இணையதளத்தில் செலுத்தலாம் என கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழிலாளர் நலநிதிச் சட்டம் 1972-ன் படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தின்படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், ஐந்தும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணி புரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.10, ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக ரூ.20 சேர்த்து மொத்தம் ரூ.30 வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத்தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி, 2020-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை வரும் ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை www.lwb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக செலுத்தலாம். அல்லது “செயலாளர், தமிழ்நாடு தொழி லாளர் நல வாரியம், சென்னை - 600 006” என்கிற பெயருக்கு வங்கி வரைவோலையாக ஜனவரி 31-ம் தேதிக்கு முன்பாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago