திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக் காடு கிராமத்தில் உள்ள பொங்கு சனீஸ்வரர் கோயிலில் நேற்று அதிகாலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கருங்குவளை மலர்களால் அர்ச்சனை, தங்கக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், பங்கேற்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பசுபதீஸ்வரர் கோயிலில்...
சனிப் பெயர்ச்சியையொட்டி, கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நவகிரஹ மூர்த்திகள், சனீஸ்வர பகவானுக்கு மூலமந்திர யாகம், அஸ்திர ஹோமம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் பக்தர்கள் பங்கேற்று சனீஸ்வரரை தரிசனம் செய்தனர்.
பிரம்மபுரீஸ்வரர் கோயிலில்...
பெரம்பலூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நேற்று சனி பகவானுக்கு விநாயகர் பூஜை, அனுக்ஞை, கும்ப பூஜை, திரவிய ஹோமம், அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்றன. இதில், பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த பூஜைகள் நிறைவடைந்த பின்னர், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நாகப்பட்டினத்தில்...
நாகை காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் உள்ள சனீஸ்வரருக்கு நேற்று சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடரந்து, தங்கக் கவசம் சாத்தப்பட்டு, மலரலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், அதிகாலை 5.22 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago