பிப்.10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முடிவு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் என்.குமாரவேல், செய்தியாளர்களி டம் கூறியது: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் அதன் பாதையில் இருந்து விலகி, அரசுக்கு ஆதர வான நிலைப்பாட்டை எடுத்து, ஊழியர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். இதனால், மாநில நிர்வாகிகள், இன்று(நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் நீக்கப்பட்டு, எஸ்.தமிழ்ச்செல்வியைத் தலைவராகக் கொண்ட புதிய மாநில நிர்வாகிகள் 15 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய அரசு ஊழி யர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு போனஸ், ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு கருணைத் தொகை ஆகியவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.30-ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப் பாட்டம் நடத்தவும், ஜன.4-ம் தேதி முதல் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தவும் மற்றும் ஜன.22-ம் தேதி சென்னையில் தலைமைச் செயலகம் முன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

அதன்பிறகும் கோரிக்கை களை நிறைவேற்றாவிட்டால், பிப்.10-ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார். அப்போது, சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட எஸ்.தமிழ்ச்செல்வி உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்