கடலூர், கிள்ளை, மரக்காணம் மற்றும் புதுச்சேரி பகுதி கடற்கரைகளில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 16-ம் ஆண்டு சுனாமி நினை வஞ்சலி நேற்று நடத்தப்பட்டது. நிகழ்வில் பங்கேற்றோர், சுனாமியில் இறந்தவர்களை நினைத்து கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
அரசு சார்பில் புதுச்சேரி கடற் கரையில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி, எம்எல்ஏ லட்சுமிநாராயணன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், ஆட்சியரும், மீன் வளத்துறை செயலருமான பூர்வா கார்க், இயக்குநர் முத்து மீனா உள்ளிட்ட அதிகாரிகள் கடலில்பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத் தினர்.
புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செய லாளர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் வம்பாகீரப்பாளையம் மீனவ மக்கள் அமைதி ஊர்வலம் சென்று, டூப்லக்ஸ் சிலை அருகில் கடலில் அஞ்சலி செலுத்தினர். வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ தலைமையில் ஊர் மக்கள் முத்தி யால்பேட்டை சோலைநகர் கடற்கரை சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பைபர் படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இப்பகுதி மீனவ மக்களுடன் ஜெயமூர்த்தி எம்எல்ஏ மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர்களும் நினைவஞ்சலி செலுத்தினர். மேலும், புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களிலும் மீனவ பஞ்சாயத்து மற்றும் மீனவ அமைப்புகள் சார்பிலும் சுனாமியால் இறந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலூரில் அஞ்சலி
கடலூர் சில்வர் பீச்சில் உள்ள சுனாமி நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள், அனைத்து கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் மீனவ சமூக மக்கள் உயிரி ழந்தவர்கள் படத்துக்கு மலர் வளை யம் வைத்தும், கடலில் பூ தூவி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கலைமணி, முன்னாள் மீன்வளத்துறை வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் தேன்மொழி காத்தவராயன், கிள்ளை கிராம தலைவர் தேவநாதன், சின்ன வாய்க்கால் கிராம தலைவர் சங்கர்,பில்லுமேடு தலைவர் கோவிந்தன், பட்டரையடி கிராம தலைவர் கலை தமிழன், படகு உரி மையாளர் கூட்டுறவு சங்க தலைவர் மதியழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மரக்காணத்தில் அஞ்சலி
மரக்காணம் அருகே வசவன் குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியர்குப்பம், அனுமந்தைகுப்பம், செட்டி நகர்குப்பம், மண்டவாய் புதுக்குப்பம், பனிச்சமேடுகுப்பம், கூனிமேடு குப்பம் உள்ளிட்டட 19 மீனவ கிராமங்களில் நேற்று சுனாமி தின நினைவஞ்சலி அனுசரிக் கப்பட்டது.கூனிமேடுகுப்பம் மீனவர் கிரா மத்தில் உயிர் இழந்தவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இது போல் மீனவர்கள் ஒன்று சேர்ந்து சுனாமியால் உயிர் இழந்த அனைத்து ஆத்மாக்களும் சாந்தி அடையும் வகையில் கடலில் சென்றுமலர் மற்றும் பால் தூவி, மவுன அஞ்சலி செலுத்தினர். மரக்காணத்தில் அரசு சார்பில் நினைவஞ்சலி நடை பெறவில்லை.
சுனாமி நினைவஞ்சலியையொட்டி நேற்று அனைத்து மீனவர் களும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago