படிப்பு உதவித் திட்ட தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை நாளை (28-ம் தேதி) முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்கிற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2020-21-ம் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு பயில்பவர்களாக இருக்க வேண்டும். பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமை ஆசிரியர்கள் தேவையான வெற்று விண்ணப் பங்களை நடப்புக் கல்வி யாண்டில் 8-ம் வகுப்பு பயின்று வரும் தகுதியுடைய மாணவர்களிடம் கொடுத்து, பெற்றோர் உதவி யுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.

புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசி ரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன், வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் இணையதள முகவரி குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். கால தாமதமாக பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் கட்டாயமாக நிராகரிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்