முதல்வர் பழனிசாமி அனைத்து சமூக மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கி ணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
அதிமுக ஆட்சியின் மீது திமுகவினரால் எந்த குறையும் கூற முடிய வில்லை. கிராம சபை என்கிற போது அனைத்து தரப்பு மக்களும் கூடுவார்கள். அதனை பயன்படுத்தி தங்களது கருத்துகளை சொல்ல திமுகவினர் முயற்சி செய்கின்றனர். தன் கட்சியின் பெயரை சொன்னால் மக்கள் வர மாட்டார்கள் என்பதால் மக்களை ஏமாற்ற கிராம சபை என்ற பெயரை பயன்படுத்து கின்றனர். மக்கள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள்.
பாமகவுக்கு சில கொள்கைகள் உள்ளன. அதனை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். தற்போது முதல்வர் பழனிசாமி அனைத்து சமூக மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். பாமக கோரிக்கையை ஏற்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எல்லா சமூக மக்களின் உணர்வை மதித்து அவர்கள் உரிமையை பாது காக்கும் வகையில் அரசு தனது நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும். இட ஒதுக்கீடு பொறுத்தவரை ஆழமாக சிந்தித்து நிரந்தர முடிவு எடுத்தால் தான், இந்த சமூக பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முடியும். காலம் கனிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல நீதி கிடைக்கும் அரசாக அதிமுக அரசு இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago