தி.மலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை மகிழ்ச் சியுடன் கொண்டாடும் வகையில் தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, தலா 20 கிராம் உலர் திராட்சை மற்றும் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு அடங் கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ஆகியவற்றை அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தர விட்டுள்ளார். மேலும் அவர், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநி யோகம் டிசம்பர் 26-ம் தேதி (நேற்று) முதல் வரும் 30-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவித் திருந்தார்.

அதன்படி, தி.மலை மாவட்டத் தில் சுமார் 7 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

அதில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500-ஐ பெற்றுக் கொள்ள வேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள் ளது. ஜனவரி 4-ம் தேதி முதல், தினசரி தலா 200 பேருக்கு பொங் கல் பரிசு வழங்கப்படவுள்ளது. காலையில் 100 பேருக்கும்,பிற்பகல் 100 பேருக்கும் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வாங்க முடியாதவர் களுக்கு வரும் ஜனவரி 13-ம் தேதி வழங்கப்படவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்