திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தொலை பேசி வாயிலாக புகார் தெரிவித்தால் தேங்கியுள்ள குப்பைகள், கழிவுநீர் உடனடியாக அகற்றப் படவுள்ளன என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்கள், 208 கிராம ஊராட்சிகளில் பொது மக்களின் பங்களிப்போடு தூய்மை கிராமமாக மாற்றும் வகையில்,அதிகம் தேக்க மடைந்த குப்பைகள், கழிவுநீர் மற்றும் ஒருமுறை மட்டும் பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை ஊராட்சி அமைப்புகள் சார்பில் அகற்றநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற கழிவுப்பொருட்கள்
எனவே, ஊரகப் பகுதிகளில் ஏதேனும் தேவையற்ற குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றப்படாமல் இருப்பது தெரியவந்தால், அது தொடர்பாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தை 04179-298045 அல்லது 74029-03663 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.
வெகுமதி வழங்கப்படும்
புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்களை ஏதேனும் குடியிருப்புப் பகுதியில் இருப்பு வைத்திருந்தால், அதனை சம்பந்தப் பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தால் வெகுமதி வழங் கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago