பிரதமரின் உதவித்தொகை வழங்கும் நிகழ்வை காணொலியில் பார்வையிட்ட திருப்பூர் விவசாயிகள்

By செய்திப்பிரிவு

விவசாயிகள் பயன்பெறும் வகையில், பிரதமரின் கிசான் திட்டத்தில் மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021-க்கான உதவித்தொகை வழங்கும் விழாவை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வு, மேற்கண்ட திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு, காணொலிக் காட்சி மூலமாக காண்பிக்கப்பட்டது. அதன்படி, திருப்பூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் பல்லடம் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் பங்கேற்ற விழா காண்பிக்கப்பட்டது.

இதில், விவசாயிகளுடன் பிரதமர் உரையாடியதை அனைவரும் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மைத் துறை அலுவலர்கள் செய்திருந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "கிசான் திட்டத்தில் பல்வேறு கட்டங்களாக விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் வட்டாரத்தில் 8000 பயனாளிகள் உள்ளனர். இந்த உதவித்தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும். மாவட்டத்தில் 13 இடங்களில் விவசாயிகள் பார்வையிடும் வகையில், பிரதமரின் உரை காணொலியில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்