கீழ்வெண்மணியில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு நினைவேந்தல் கூட்டம்

By செய்திப்பிரிவு

தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் 57 ஆண்டுகளுக்கு முன்பு கால் படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக, ஆதிக்க சாதியினரால் 44 விவசாயத் தொழிலாளர்கள் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருப்பூரில் காட்டுவளவு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ச.நந்தகோபால் ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து வெண்மணி தியாகிகள் நினைவுகளையும், டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்தும் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் பேசினார். மதிமுக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல, காங்கயம் மற்றும் நத்தக்காடையூர் பேருந்துநிலையங்கள் அருகே புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில்நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்