திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம்ஏலக்காய் மற்றும் ரொக்கம் ரூ.2500 ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையிலும், விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதியும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், நடைமுறையிலுள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்குவழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் நியாயவிலைக் கடைக்கு சென்று, பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்.
இதுதொடர்பாக புகார்கள் இருப்பின், மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 0421-2971116 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago