போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் பேசினார்.

கூட்டத்தில், ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும், பதவி உயர்வு பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும், கிராம ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்