ராமநாதபுரத்தில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை முன் வாஜ்பாய் உருவப் படத்துக்கு நகர் பாஜக தலைவர் வீரபாகு தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொதுச் செயலாளர் குமார், செய்தித் தொடர்பாளர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் பட்டணம் காத்தான், ஈசிஆர் சாலை, பாரதி நகர் உட்பட 6 இடங்களில் பாஜக ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முருகன் தலைமையில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில செய்தித் தொடர்பாளர் குப்புராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கமுதி காளியம்மன் கோவில் தெரு, ஆதி திராவிடர் தெரு, வெள்ளையாபுரம், பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா மாநில செய்தித் தொடர்பாளர் சுப.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் கணபதி, ஒன்றியச் செயலாளர்கள் முருகன் (தெற்கு), சரவணன் (வடக்கு) ஆகியோர் முன்னிலையில் 200 பேருக்கு இலவச சேலை, போர்வைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினை விடத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

கமுதி அருகே எழுவனூர் கிராமத்தில் மணிகண்டன் தலைமை யிலும், மண்டலமாணிக்கம் பச்சேரி கிராமத்தில் ஆனந்த் தலைமையிலும் 40 பேர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில், மாநில செய்தித் தொடர்பாளர் சுப.நாகராஜன் முன்னிலையில் இனணந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE