கிருஷ்ணகிரி கம்மம்பள்ளியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கி வரும் அட்மா திட்டத்தின் கீழ் கம்மம்பள்ளி கிராமத்தில் நீடித்த, நிலையான மானாவரி இயக்க ஒரு நாள் பயிற்சி நடந்தது. எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் தலைமை தாங்கி வேளாண் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி எடுத்துக் கூறியதுடன், விவசாயிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறினார். மேலும் நீடித்த, நிலையான மானாவாரி இயக்கம் மூலம் நடத்தப்படும் கோடை உழவு மற்றும் அனைத்து பயன்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப அலுவலர் செந்தில்குமார், பூச்சி மற்றும் நோய் பற்றிய விவரங்களை பயிர் வாரியாக எடுத்துக் கூறியதுடன், அனைத்து தொழில்நுட்பங்கள் பற்றியும் விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் விஜயன், மானாவாரி சாகுபடி பற்றி பேசினார். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் துரைசாமி, பயிற்சியின் நோக்கம் பற்றி கூறினார். அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்