இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் ஓய்வூதியர்கள் முப்பெரும் விழாவில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், 5-வது மாவட்ட பேரவை கூட்டம், ஓய்வூதியர் தினவிழா, 75 வயது கடந்த ஓய்வூதியர்கள் கவுரவிப்பு விழா என முப்பெரும் விழா கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராஜாமந்திரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.

இதில், தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் களுக்கு விரோதமாக திருத்தங்கள் செய்யக்கூடாது. இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஜோலார்பேட்டையில் இருந்து ஓசூர் வரை கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும்.

அஞ்செட்டி, போச்சம்பள்ளி தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்ட இணை செயலாளர் கலைவாணி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்