20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரும் எங்களது போராட்டம் உரிமைக்கானது என்பதால் கட்சி யின் கூட்டணிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு குறித்து பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாமக மாநில துணை பொதுச் செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி.கே.ரவி, முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.கே.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் சுரேஷ், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ஜி.குமார், மாநகர செயலாளர் சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றுப் பேசினார். இதில், மாநில துணைத் தலைவர் என்.டி.சண்முகம், மகளிரணி தலைவி வரலட்சுமி, மாநில துணைத் தலைவர் சி.கே.ரமேஷ்நாயுடு, மாநில வன்னியர் சங்க செயலாளர் எம்.கே.முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வன்னியர்களுக்கு தனியாக கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக வரும் 30-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு வருகிற 30-ம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும். எங்களது போராட்டத்துக்கு மாற்றுக் கட்சியில் உள்ள வன்னியர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். எங்களது இந்தப் போராட்டம் உரிமைக்கானது. இதில், கட்சியின் கூட்டணிக்கும், போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இடஒதுக்கீட்டை வழங்க வேண் டும். தேர்தல் வருவதால் தாமதப்படுத்தக் கூடாது. புயல் சேதத்துக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எங்கள் போராட்டத்தை திமுக கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநிலத் தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்’’ என்றார்.
திருப்பத்தூர்
பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏவுமான டி.கே.ராஜா தலைமை வகித்தார். மாநில மகளிரணி தலைவர் நிர்மலா, மாநில துணைத் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்டச்செயலாளர் கிருபாகரன் வரவேற்றார். பாமக தலைவர் ஜி.கே.மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago