திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி திறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி மூலவருக்கு நேற்று காலைசிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்து சுவாமி அருள்பாலித்தார்.
முன்னதாக, கோயில் வளாகத்தில் மின் விளக்குகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் மற்றும் வெம்பாக்கத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago