நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல்உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 885 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
கடந்த மாதம் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. உதகை தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள், குன்னூர்தொகுதியில் 223 வாக்குச்சாவடிகள், கூடலூர் தொகுதியில் 222 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 683 வாக்குச்சாவடிகள் உள்ளன.
தற்போது, கரோனா காலகட்டம் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும்ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 885 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும் போது,‘‘புதிய வாக்குச்சாவடிகளுக்கான அமைவிடங்கள் குறித்துஉதவி ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட் சியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இறுதி செய்யப்பட்டு புதியவாக்குச்சாவடிகள் அமைந்துள்ள இடங்கள் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago