இங்கிலாந்து நாட்டுடன் வரியில்லாவர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ஏ.இ.பி.சி. தலைவர் ஏ.சக்திவேல் எழுதியுள்ள கடிதத்தில், "ஆடை ஏற்றுமதி தொழிலின் வர்த்தக வரியால் வங்கதேசம், கம்போடியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல போட்டி நாடுகளுக்கு பின்னால்தான் இந்தியா உள்ளது. இந்திய ஆடைகள், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 9.6 சதவீதம் வரி குறைபாட்டை எதிர்கொள்கின்றன. 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தில் ஆடைகளின் மொத்த இறக்குமதி 24.9 பில்லியன் டாலர். வங்கதேசத்தில் இருந்து 3.6 பில்லியன் டாலர். இந்தியாவிலிருந்து 1.4 பில்லியன் டாலராக உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும். வலுவான பாரம்பரிய உறவுகளை இந்தியாவும், சில்லரை விற்பனையாளர்களுடன் நல்ல தொடர்பை இங்கிலாந்தும் கொண்டுள்ளன.
இங்கிலாந்தில் வரி குறைபாடு குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால், இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டுக்கான ஆடை ஏற்றுமதியை இரட்டிப்பாக்கக்கூடும். இதன் விளைவாக, நாட்டில் பெரும் வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுப்பதுடன், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினருக்கும் பயனளிக்கும்" எனறு குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago