உளுந்தூர்பேட்டை அருகே மது அருந்த பணம் தராததால் தந்தை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்த ஏ.குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாதாதல் விஜயராம் (36) என்பவரை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தனர்.
இதனிடையே பாலுச்சாமி தொழுநோ யால் பாதிக்கப்பட, அவர் அருகிலுள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது அவர் வீட்டிற்கு வருவதுண்டு. வெள்ளையம் மாளும், விஜயராமும் அருகிலேயே இறைச்சிக் கடை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளையம்மாளும், பாலுச்சாமியும் வீட்டில் இருந்தபோது விஜயராம், பாலுச்சாமியிடம் மது குடிக்க பணம் கேட்ட தாகக் கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த விஜயராம், அருகிலிருந்த அருவாமனையால் பாலுச்சாமியை வெட்டி கொலை செய்தார். இதில் அருகிலிருந்த வெள்ளையம் மாளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து விஜயராம் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை போலீஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளையம்மாளை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜயராமை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago