கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் பெரியார் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு வானபுரத்தில் திராவிடர் கழக ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் தா. மணிகண்டன் தலைமையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து 60-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். தந்தை பெரியார் உருவ படத்துக்கு மாலை அணிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோன்று கடுவனூர் கிளை யில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராமகிருஷ்ணன் தலை மையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது.
விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் காமராஜர் வீதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாநில துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன், மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதிமுக
விழுப்புரத்தில் மதிமுக சார்பில் ஜானகிராஜா தலைமையில் அக் கட்சியினரும், தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் நகர செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட அக் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago