திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகு தியைச் சேர்ந்த வீரக்கல் கிராமத்தில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் சி.ராமன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பாஸ்கரன், ஒன்றிய துணைத் தலைவர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ., பேசுகையில், மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகள், 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் என அனைவரையும் பாடாய்ப்படுத்துகிறது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலைகளை உயர்த்தி சாமானிய மக்களையும் சிரமப்படுத்துகிறது.
அதேபோல், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும் பொதுமக்களுக்கு பேருந்து, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உயர்வு என ஏழை மக்களைச் சிரமத்துக்குள்ளாக்குகிறது. ஓட்டுக்காக ரேஷன் கார்டுக்கு ரூ.2500 அறிவித்துள்ளனர். கிராமமக்கள் இனியும் அதிமுக அரசை நம்பத் தயாராக இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று கூறினார்.இக்கூட்டத்தில் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago