கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 800 இடைநின்ற மாணவர்கள் கண்டறியப்பட்டு, அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சிவிகிதம், ஆன்லைன் வகுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை800 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு அரசுப் பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளனர். நிகழாண்டில், மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு பாலமுரளி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago