சுகாதாரத் துறை கண்காணிப்பில் தமிழக விமான நிலையங்கள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.94 கோடி மதிப்பில் சிடி ஸ்கேன் கருவி, ரூ.78 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவை நேற்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:

தமிழகத்தில் கரோனா தொற்று 1.7 சதவீதமாக குறைந்து இருந்தாலும்கூட, நாள்தோறும் 75 ஆயிரம் பேருக்கு ஆர்டிபிசிஆர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகி றது. இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள 2,800 பேரும் மருத்து வர்களின் கண்காணிப்பில் உள்ள னர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு அரசாணை பிறப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கல்லூரி கட்டுமானப் பணிக்கு விரைவில் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார் என்றார்.

நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE