கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கிறிஸ்துமஸை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. வெளியூர்களில் தங்கிவேலை பார்ப்பவர்கள், குமரியில்உள்ள தங்கள் சொந்த கிராமங்களுக்கு வந்துள்ளனர். கிறிஸ்துமஸ்ஸ்டார்கள், குடில்கள், வண்ண மின்விளக்கு அலங்காரங்களால் வீடுகள்,நிறுவனங்கள் ஜொலித்து வருகின்றன.
கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கோட்டாறு புனிதசவேரியார் பேராலயத்தில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமையில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி அலங்கார உபகாரமாதா ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம்,நாகர்கோவில் அசிசி ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம்மற்றும் மார்த்தாண்டம், குலசேகரம், கருங்கல் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள ரோமன் கத்தோலிக்கஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மேலும், இன்றுஅதிகாலை தொடங்கி நாகர்கோவில் ஹோம் சர்ச்சில் சி.எஸ்.ஐ. ஆயர் செல்லையா தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
இதுபோல், மாவட்டம் முழுவதும் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்கள், பெந்தேகோஸ்தே சபை மற்றும் ஜெபக் கூடங்களிலும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிரார்த்தனை,ஜெபங்கள் நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக கேரளா மற்றும் பிற மாநிலங்களில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினமே சொந்தகிராமங்களுக்கு திரும்பினர். வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களில் பெரும்பாலானோரும் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இதனால், குளச்சல், கன்னியாகுமரி, முட்டம் உட்பட கடற்கரை கிராமங்கள் களைகட்டி உள்ளன.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு குமரியில் அதிக மக்கள்கூடும் இடங்கள், கடற்கரை கிராமங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சின்னக் கோயில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதுபோல் பிரசித்தி பெற்ற தூயபனிமய மாதா பேராலயம், பேட்ரிக்தேவாலயம், பேதுரு ஆலயம், புளியம்பட்டி அந்தோணியார் ஆலயம்,சொக்கன்குடியிருப்பு மணல் மாதாஆலயம் மற்றும் ஆலந்தலை, அமலிநகர், மணப்பாடு, நாசரேத் , சாத்தான்குளம் ஆர்சி, சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பாளையங்கோட்டை கதீட்ரல் தேவாலயம், சவேரியார் பேராலயம், தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா, வடக்கன்குளம்பரலோகமாதா, தென்காசி மிக்கேல்அதிதூதர் ஆலயம் உட்பட 3 மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுநடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட னர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago