தமிழகத்தில் பொது ப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட் டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் ‘நிவர்' புயல் காரணமாக தற்போது 9 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
இதைத்தொடர்ந்து, இந்த ஏரிகளில் மீன் குஞ்சுகளை வளர்க்க மீன்வளத்துறை ஏற்பாடு செய்தது. முதற் கட்டமாக கந்திலி அடுத்த புலிக்குட்டை ஏரி, சேம் பேரி ஏரி ஆகியவற்றில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்தலைமை வகித்து, 2 ஏரிகளில் கட்லா, ரோகு உள்ளிட்ட மீன் குஞ்சு களை ஏரியில் விட்டார். இந்நிகழ்ச் சியில், திட்ட இயக்குநர் மகேஷ் பாபு, மீன்வளத்துறை இணை இயக்குநர் இளங்கோ, ஊராட்சி களின் உதவி இயக்குநர் அருண், மீன்வளத்துறை உதவி இயக்குநர் கங்காதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago