கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண் திட்டங்களை ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத் தில் வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் கணியம் பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். காட்டுப்புத்தூர் ஊராட்சியில் திருந்திய நெல் சாகுபடி, நுண்ணீர் பாசன திட்டம், திசு வாழை நடவுத் திட்டம், பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சோழவரம் கிராமத்தில் மஞ்சு விரட்டு போட்டிகளில் பங்கேற்கும் 11 காளை மாடுகளையும், அதற்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந் தார். தொடர்ந்து, கணியம்பாடி வட்டாரத்தில் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வழங்க இருப்பு வைத்துள்ள கடலை, உளுந்து, நெல் விதை களை ஆய்வு செய்ததுடன், உழவர் உற்பத்தியாளர்கள் குழுவு டன் ஆலோசனையும் நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநர் மகேந்திர பிரதாப் தீக் ஷித், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்