நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கம், பிக்-அப் வாகன உரிமையாளர் - ஓட்டுநர் நலச் சங்கம், மினி டோர் வாகன உரிமையாளர்கள்- ஓட்டுநர்கள் நலச் சங்கம், விவசாயிகள் சங்கம், ஏல வியாபாரிகள் நலச் சங்கம், மேக்சி கேப் மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து நீலகிரி மாவட்ட கூட்ஸ் கேரியர் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இக்கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் நடராஜ் தலைமையில் உதகையில் நடைபெற்றது. அதன்பின் கூட்டமைப்பின் தலைவர் நடராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேகக் கட்டுப்பாடு கருவியை குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து தான் வாங்க வேண்டும் என்ற அரசின் நிர்பந்தத்தை எதிர்த்தும், ஸ்டிக்கர் ஒட்டுவதில் உள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டீசலுக்கான வாட் வரியை ரத்து செய்யவும், ஆன்லைன்வழக்குகளை ரத்து செய்யவும் வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வரும் 27-ம் தேதி முதல்கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 3,000 லாரிகள், 5,000-க்கும் மேற்பட்ட இதர சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago