லாரிகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு இழப்பீடு கோரி உறவினர்கள் மறியல்

By செய்திப்பிரிவு

பல்லடம் அருகே முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் கோழித்தீவனம் ஏற்றிய மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘திருப்பூர் மாவட்டம் உடுமலை வரதராஜபுரத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரபாகரன் (30). உடுமலையில் உள்ள கறிக்கோழி விற்பனை நிறுவனத்தின் தீவனத்தைலாரியில் ஏற்றிக்கொண்டு பல்லடம்நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவுசென்றுள்ளார். அவருடன் பிஹார் மாநிலத்தை சேர்ந்த பன்லால் (35) என்பவர் உடனிருந்துள்ளார். வாவிபாளையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற மற்றொரு லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் பிரபாகரன், பன்லால் உயிரிழந்தனர். தகவலின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, இருவரது உடல்களையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்’’ என்றனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும் அவர்கள் பணி செய்த நிறுவனம் சார்பில் உரிய இழப்பீடு வழங்கக் கோரி, நேற்று மாலை பல்லடம் அரசு மருத்துவமனை முன் கோவை-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துணைக்கண்காணிப்பாளர் ராமச்சந்திரன்உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால்கோவை- திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்